பெரம்பலூரில் தனியார் கண் மருத்துவமனை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது…
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 9ஆம் தேதி முதல் இயக்கப்படும் இந்த பேருந்தில் பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி பண்டிகைக்கு விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் தலைநகரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும். அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு தடை செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வழக்கமான கட்டணத்தில் இருந்து 30 சதவிகிதம் குறைந்த கட்டணம் வசூலிக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டு போல கட்டண பிரச்சனை இந்த ஆண்டும் இருக்காது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.