திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குடும்பத்தை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து பேருந்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார் அப்பொழுது துறையூரில் இருந்து ஆலத்துடையான் பட்டி செல்ல அரசு பேருந்தில் ஏறி உள்ளார் பேருந்தில் தீபாவளி சமயமாக இருப்பதால் கூட்டம் நெரிச்சல் சற்று அதிகமாக இருந்துள்ளது. இதனால் இவர் பேருந்தின் பின்பு படியில் நின்று கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது இவருக்கு செல்போன் அழைப்பை வந்துள்ளது அதை எடுத்துப் பேசும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் பேருந்து நடத்தினர் துறையூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பயணி இறந்தது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..
- by Authour
