அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இன்று (6 /11 /2023 ) திருமானூர் ஊராட்சி ஒன்றியம் வாரணவாசி கிராமத்தில் கால்நடைகளுக்கு நான்காவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பு முகாம் வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் திரு கி ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் மதிப்பிற்குரிய அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 1,47 ,000 கால்நடைகளுக்கு 6/ 11 /2023 முதல் தொடங்கி 21 நாட்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்கு 46 குழுக்கள் அமைக்கப்பட்டு கிராமங்கள் தோறும் தடுப்பு ஊசி முகாம் நடத்தப்பட உள்ளன. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது பசுக்கள் எருதுகள் எருமைகள் மற்றும் நான்கு மாத வயதுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் தவறாது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி செலுத்தி தங்களது கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் அரியலூர் கோட்டை உதவி இயக்குனர் பொறுப்பு மருத்துவர் இரா ரிச்சர்ட் ராஜ் உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் பேர் ரமேஷ் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் நான் பிரபாகரன் கால்நடை உதவி மருத்துவர்
மருத்துவர் ராஜா மருத்துவர் கார்த்திகேயன் மருத்துவர் வேல்முருகன் மருத்துவர் மாலதி கால்நடை ஆய்வாளர் திருமதி செல்வராணி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் திரு ராமலிங்கம் திரு மாரிமுத்து திரு செல்வராஜ் திருமானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ஜெயக்குமார் வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஊராட்சி செயலாளர் பெ சபிதா ஆகியோர் கலந்துகொண்டு வாரணவாசி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி அளிக்கப்பட்டது. வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் திரு கி ராஜேந்திரன் அவர்களால் இம் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டது.