Skip to content
Home » ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக மோசடி… எஸ்பி எச்சரிக்கை…

ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக மோசடி… எஸ்பி எச்சரிக்கை…

வரும்  12- ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் (Online) இல் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக போசடி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள் பட்டாசு வாங்கும் இணையதளத்தில் சட்டப்பூர்வமான தன்மையை சரிபார்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வழங்கிய மதிப்புரைகளை (Reviews) படிக்க வேண்டும். அலுவலக முகவரி, தொடர்புக்கு தொலைப்பேசி எண் ஆகியவை இணையதளத்தில் உள்ளனவா என்பதை பார்த்துவிட்டு, பாதுகாப்பான கட்டணமுறை பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆராய்ந்து, உறுதி செய்ய வேண்டும்.

பிரபலம் இல்லாத இணையதளங்களில் பட்டாசுகளை வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பொருட்கள் கைக்கு வந்தவுடன் பணம் கொடுக்கும் சேவையை (Cash on Delivery) மட்டுமே பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் ஆடர் செய்யப்பட்ட பொருள் சரியாக வந்து சேர்வதை உறுதி செய்யலாம். இதன் மூலம் மோசடி இணையதளத்தில் பணத்தை இழப்பதைத் தவிர்க்கலாம்.

போலியான இணையதளத்தில் பட்டாசு வாங்க முயன்று யாரேனும் பணத்தை இழந்தால், அவர்கள் எஸ்கிரின்ஷாட்கள் (Screen Shots), மின்னஞ்சல் தகவல் தொடர்புகள், இணையதளத்தில் உள்ள தொடர்பு விவரங்கள், பண பரிவர்த்தனை பதிவு விவரங்களுடன் உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலியான விளம்பரங்கள் வரக்கூடும். ஆதனை பொது மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற மோசடியில் சிக்கினால் சைபர் குற்றப்பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு புகார்அளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகாரைப் பதிவு செய்யலாம் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!