கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8,000 லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் கைது செய்தனர்.