திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இரவது மகன் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் (40). இவர் அதேப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு அதேப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடிகள் ஈடுபட்டதாக தெரிகிறது. அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன் வீட்டில் இருந்த நிலையில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து 2 பெட்ரோல் குண்டு வீசினர். இதில் ஒரு வெடித்தது. இன்னொன்று வெடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டனில் தாயார் பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 23ம் தேதி கீழகல்கண்டார்கோட்டை பகுதியில் அரசியல் பிரமுகரின் வீட்டில் ரவுடிகள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர் என்பது குறிப்பிடதக்கது.