திருவெறும்பூர் அருகே நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை திருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி எஸ் பி வருண் குமாருக்கு வாட்சப் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் எஸ்பி தனி படை போலீசார் ஆலத்தூர் ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த கார் மற்றும் ஆட்டோவை சோதனை செய்து பார்த்தப் போது காருக்குள் 5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது.
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கார் மற்றும் ஆட்டோவில் வந்த வடக்கு காட்டூர் வேணுகோபால் நகர் 2வது தெருவை சேர்ந்த மோகன் இவரது மகன் கோபால் (எ) குஞ்சு கோபால் வயது(27), கரூர் குழந்தை பாளையம் ரங்கசாமி நகரை சேர்ந்த ராஜேஷ் (எ)ராஜேந்திரன் (59), திருப்பூர் புதுப்பாளையம் வீர மாத்தி தோட்டத்தை சேர்ந்த செந்தில் (ஏ) சின்னசாமி (50) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா, நாட்டு துப்பாக்கிமற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.