தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில் பொன்னமராவதியில்
பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பொன்னமராவதி சேலம் புதிய வழித்தடத்தில் செல்லும் புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை கோட்ட பொதுமேலாளர் இரா.இளங்கோவன் முன்னிலை வகித்தார். பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து மாலை 4 க்கு பொன்னமராவதியிருந்து புறப்பட்டு புலவனார்குடி, இடையாத்தூர்,இடையப்பட்டி, சடையப்பட்டி, பாலகுறிச்சி, ணப்பாறை,குளித்தலை,முசிறி,தொட்டியம்,நாமக்கல் வழியாக சேலத்திற்கும், பின்னர் அங்கு இரவு 0.23 மணிக்கு புறப்பட்டு பொன்னமராவதிகு வர உள்ளது. இந் நிகழ்ச்சியில் பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா
அடைக்கலமணி, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், கோட்டமேலாளர் (வணிகம் )சுரேஷ், உதவிஇயக்குனர்(மக்கள் தொடர்பு) அ.செந்தில், பொன்னமராவதி கிளை மேலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
