நாகையில் துவங்கிய, நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சியில் 8, கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று திரும்பிய, ஆட்சியர் ,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மற்றும் பொதுமக்கள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நடைப்பயிற்சி இன்று தமிழகம் முழுவதும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது. இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி நடைபெற்றது.நாகை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து துவங்கிய நடைபயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இதில் மருத்துவ துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, விளையாட்டு துறை மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து துவங்கிய நடை பயிற்சி ஆனது, சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரையிலான புதிய கடற்கரை சாலை, நாகை-நாகூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக மாவட்ட தொழில் பயிற்சி மையம் வரையில் சென்று பின்னர் மீண்டும் அதே இடத்தில் நிறைவடைந்தது.