திருச்சி, மணப்பாறை வையம்பட்டி தெற்கு முகவனூர் சீதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45).
இவருக்கு சுமதி, போதும் பொண்ணு (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
இவர்களில் 2-வது மனைவி போதும் பொண்ணு சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 25ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பாண்டியன் மனைவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத்தொடர்ந்து வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரது 2-வது மனைவியை தேடி வருகின்றனர்.