திருச்சி இ புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் வயது (51) . இவர் சோனா மீனா தியேட்டர் கருப்பு கோவில் பின்புறம் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பிரபல பைனான்ஸ் தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த மண்ணச்சநல்லூர் கூத்தூர் கீழத்தெருவை சேர்ந்த பிரபல பைனான்ஸ் நிறுவன மேலாளர் இரண்டு மாத நிலுவைத் தொகையை அர்ஜுனனிடம் கேட்டு உள்ளார். அர்ஜுனன் கடன் நிலுவை தொகையை தர மறுத்து மேலாளரை தகாத வார்த்தைகளால் திட்டி அவர் மீது வெண்ணீரை ஊற்றி மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மேலாளர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலாளர் பூபதி அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஜுனனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.