மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜூனியர் பாலையா. இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், வளசரவாக்கம் இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பின், நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.