நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டி உள்ளது. இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரையும், இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் , தீபாவளி அன்று காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.