தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். காற்றில் மாசு அதிகரித்துள்ளதை தடுக்கும் வகையில் பசுமை பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்கு பின்னர் பட்டாசுகள் வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.