செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு மலர்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வரிடம் இருந்து முதல் பிரதிகளை, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார். உடன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.