நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புத்தாண்டு அன்று சென்னை எழும்பூர் ரயில்வே நிலையம் அருகே ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பரிசுகளை வழங்கினர். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நயன்-விக்கி ஜோடி தங்கள் குழு உறுப்பினர்களுடன் ஆதரவற்றர்களுக்கு பரிசுப் பைகளை வழங்குவதைக் காணலாம்.
இந்தவீடியோவில் கனெக்ட் நடிகையான நயன்தாரா வெள்ளை தொப்பியுடன் சாதாரண கருப்பு உடையை அணிந்திருக்கிறார். மறுபுறம், விக்னேஷ் சிவன் அதேபோன்ற தொப்பியுடன் ஜோடியாக வெள்ளை நிறடீசர்ட்டும் அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன் மற்றும் விக்கியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.