திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு படைகளும் தொழிற்சாலைகளில் ஒன்றாகும் இந்நிலையில் நாடு முழுவதும் இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் நடந்த மினி மராத்தான் போட்டியை துப்பாக்கி தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர் சைரேஷ்குமார் கொடி அசைத்து
தொடங்கி வைத்தார். மேலும் மராத்தான் போட்டியிலும் கலந்து கொண்டார். துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசும், சிறுவர் சிறுமிகள் 10 பேருக்கு ஆறுதல் பரிசு மற்றும் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு என சைரேஷ்குமார் வழங்கினார்.