Skip to content
Home » கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

கரூர் வழியாக பெங்களூர் செல்லும் 61 வயதில் உலகம் சுற்றும் ஒரு அமெரிக்கர்….

  • by Senthil

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் ரிச் ஹேகெட் (61). இவர், 1962 ஆம் ஆண்டு பிறந்தார். தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். படிப்பில் பெரிய அளவில் படிப்பில் சாதிக்காத இவர், சமையலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் சமையல் செய்து வந்த இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இவர் உலகம் முழுதும் சுற்றி பார்க்க வேண்டும் என மனதில் ஆவல் தோன்றியுள்ளது.
1991-ல் இருந்து தற்போது வரை 120 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். இந்தியா வழியாக 2014, 2015, 2018 தற்போது 2023ல் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த முறை சைக்கிள்

ஓட்டி உலகை சுற்றும் பயணத்தை தொடங்கியுள்ளார். நான் பயணிக்கும் பைக் ஒரு Recombinant பைக், Chez Republic பைக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட AZUB.

2013ல் இருந்து 40000கிமீக்கு மேல் இந்த சைக்கிளில் பயணித்துள்ளார். தினசரி சராசரியாக ஒரு நாளைக்கு 80-125கிமீ செல்கிறார். கரூர் வழியாக பெங்களூர் செல்ல உள்ளதாகவும், போகும் இடங்களில் ஹோட்டல்களில் தங்கி செல்வதாகவும், நாட்டைப் பொறுத்து பல நேரங்களில் சொந்த உணவை சமைத்து சாப்பிடுவதாகவும், பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உணவுகளை ருசித்து சாப்பிடுவதாகவும் கூறினார். உலகம் சுற்றும் வாலிபன் என கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், 61 வயதில் உலகத்தை சுற்றி வரும் இந்த அமெரிக்கர் பற்றி தற்போது தான் கேள்விபடுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!