திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி , உதயநிதி ஆகியோர் இன்று கோவையில் உள்ளனர். அங்கு தங்கை கனிமொழிக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே. என். நேரு, செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி . கோவை மேயர் விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.