சீர்காழி கோவிந்தராஜ் நகரில் மனைவி ரமணியுடன் வசித்து வருபவர் 82 வயது முத்துவீரன் இவரது 4 மகன்கள் 2 பெண் பிள்ளைகள் 6 பேரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நிலத்தை விற்று கிடைத்த தொகை ரூ.48 லட்சத்தை லா ரூ.6 லட்சம்வீதம் 6 நபர்களுக்கும் பிரித்து அளித்துவிட்டு மீதத்தொகையை. மகன் சண்முகசுந்தரத்திடம் வழங்கியுள்ளார். அவர் மாதந்தோறும் மாதம் 2000 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு சில மாதங்களாக அதையும் கட்டாததால், சீர்காழி ஆர்டிஓவிடம் மனு அளித்திருந்தார்.மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் மற்றும் விதிகள் 2007ன்படி மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் மருத்துவ செலவு அதிகமாகி வருவதால் என்னிடமிருந்து கைப்பற்றிய தொகையை எனக்கே அளிக்கவேண்டும் என தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தந்தையிடம் இருந்து சொத்துக்களை பெற்ற பிள்ளைகள்… கவனிக்காததால் கலெக்டரிடம் புகார்…
- by Authour
