பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன் , லீலாவேலு, பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், ராஜ்முகமது, மணிவேல் , சிவகுமார், ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..