Skip to content
Home » டைரக்டர் விக்ரமன் மனைவி கால்களை முடக்கிப்போட்ட பிரபல தனியார் ஆஸ்பத்திரி…..அமைச்சர் மா.சு. விசாரணை

டைரக்டர் விக்ரமன் மனைவி கால்களை முடக்கிப்போட்ட பிரபல தனியார் ஆஸ்பத்திரி…..அமைச்சர் மா.சு. விசாரணை

புது வசந்தம், பூவே உனக்காக , சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல , பிரியமான தோழி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன்.   இவருடைய மனைவி ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன கலைஞர்.

1000 மேடைகளில்  நடனம் ஆடியுள்ளார்.  தற்போது 5 ஆண்டுகளாக இவர் படுத்தப்படுக்கையாக இருக்கிறார். இவருக்கு திடீரென முதுகு வலி பிரச்சினை வந்தது. இதனால் பரிசோதனை செய்ய  பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற போது புற்றுநோயாக இருக்கலாம் என கருதி அவருக்கு பயாப்சி செய்தார்கள். அதற்கு அரை மணி நேரம் ஆகும் என சொன்னார்களாம். ஆனால் மூன்றரை மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து ஜெயப்பிரியாவால் கால் விரலை கூட அசைக்க முடியவில்லை.

இதையடுத்து அவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை நிர்வாகம் பிசியோதெரபி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்களாம். மருத்துவமனையில் தவறான ஆபரேஷன் செய்து விட்டார்கள். எல்லாவிதமான

 

சிகிச்சைகளை கொடுத்தும் அவரது கால்கள் சரியாகவில்லை, இதனால் அவருடன் எப்போதும் இரு நர்ஸ்கள் இருந்து  சேவை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

மனைவியின் இந்த நிலையை கண்டு கணவர் விக்ரமன் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகிறார்.  மனைவியை தனியே விட்டுவிட்டு எங்கும் செல்ல முடியாத நிலையில் விக்ரமன் இருக்கிறார். சூர்யவம்சம் 2 படத்திற்கான அழைப்பு வந்த போது கூட மனைவியை தனியாக விட்டுச் செல்ல முடியாது என்பதால் அவர் போக மறுத்துவிட்டார். ஜெயப்பிரியாவின் கால்கள் சரியாக அவர் நடக்கும் வரை பேனாவை கையில் தொட மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் விக்ரமன் இருக்கிறாராம். இதுவரை சம்பாதித்த பணம் முழுவதையும்

மருத்துவத்திற்கே செலவு செய்துவிட்டாராம். சொத்துக்களை அனைத்தையும் விற்று அவரை கவனித்து வருகிறார். மனைவி வருத்தப்பட்டால் விக்ரமன் மனம் உடைந்து கண் கலங்குகிறாராம்.

இதனால் விக்ரமனின் மனைவி தன்னை தைரியமானவராகவே வைத்துக் கொள்கிறாராம். மருத்துவமனையிலிருந்து ஜெயப்பிரியாவுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. அவருடைய நம்பரை கூட பிளாக் செய்துவிட்டார்களாம். மருத்துவமனையில் சேரும் போது நன்றாக இருந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனையில் சேர்ந்ததாகவே டிஸ்சார்ஜ் சம்மரியில் எழுதியுள்ளனராம். இந்த பேட்டியை ஜெயப்பிரியா  பேட்டியில் தெரிவித்திந்தார்.

இந்த பேட்டியை கேட்ட  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது குறித்து  டைரக்டர் விக்ரமனை சந்தித்து என்ன நடந்தது என விசாரிக்க  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டாராம். அதைத்தொடர்ந்து   அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இயக்குநர்  விக்ரமனை இன்று  நேரில் சந்தித்தார். அப்போது  கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவக்குழுவினர்  உடன் இருந்தனர்.

அவர்கள்  ஜெயப்பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை  முறைகளை ஆய்வு செய்தனர். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து  மருத்துவகுழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *