Skip to content
Home » பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  • by Authour

பசும்பொன் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா 3 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளான 28-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன்

தலைமையில் தொடங்கி நடைபெற்றது. அங்கு தமிழக அரசு சார்பில் தேவரின் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2-ம் நாளான நேற்று அரசியல் விழாவாக நடைபெற்றது. இதில் தேவரின் அரசியல் பயணம் குறித்து சொற்பொழிவுகள் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவாக நடைபெற்றது.  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  டிஆர்பி ராஜா,  மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், முத்துகருப்பன், கண்ணப்பன் மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *