மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக, குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி மாவட்ட அமைப்பாளர் அறிவுச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40 அணிகள் பங்கேற்றன. நடைபெற்ற மூன்றாவது நாள் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.சென்னை கட்டங்குடி பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ 70ஆயிரம் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000, நான்காம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 40,000 காலிறுதியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.