மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன. கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது. மதுரை-தொண்டி சாலை அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது.