50 சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 11 நாட்களாக வேலை தர மறுப்பதை கண்டித்தும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய சம்பள உயர்வை கேட்டதற்காக வேலை தராமல் பட்டினி போடும் வேஸ்ட் பேப்பர் முதலாளிகளை கண்டித்தும். மீண்டும் வேலை வழங்கிட கேட்டும் சம்பள உயர்வு பேசி முடித்திட கோரியும் சுமை பணி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தோடு திருச்சி இபி ரோட்டில் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு சுமை பணி சங்கத் தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மேலும் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ரமேஷ், சுமைப்பணி சங்க மாவட்ட துணை தலைவர் சின்னதுரை, லாரி புக்கிங் ரோடுவேஸ் சங்கம் மூர்த்தி, ட்ரான்ஸ்போர்ட் சங்கம் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.