கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள காந்தியார் நடுநிலைப் பள்ளியில் கரூர் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் 12 வயது மற்றும் 15, 17, 19 என்ற வயது வித்தியாசத்தில் கரூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு
பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இடையே இந்த போட்டிகள் நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கு தமிழ்நாடு மாநில மல்யுத்த சங்கத்தின் செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார்.
இந்தப் போட்டிகளை புகலூர் நகராட்சி மன்ற தலைவர் சேகர் துவக்கி வைத்தார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.