மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பு வாகனம் திருட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ,தஞ்சை மாவட்டத்தை ரவி(20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ்(26),
திண்டுக்கல் மாவட்ட சேர்ந்த தாலிக்ராஜ்(28) ஆகிய மூன்று நபர்களும் திருட்டு குற்ற சம்பவ பின்னணியில் இருந்து வருகின்றனர்.
செயின் பறிப்பு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தலைமறைவாக இருந்து வந்த மூன்று நபர்களை மதுரை போலீசார் தேடி வரும் நிலையில்,இவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பதாக மதுரை காவல்துறை சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,
கரூர் நகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மூவரையும் பார்த்த போலீசார் அவர்களை விரட்ட தொடங்கினர்.
அப்போது மூவரும் இருசக்கர வாகனத்தின் மூலம் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலை அரவக்குறிச்சி நோக்கி வேகமாக சென்றுள்ளனர்.
அதனை நோட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து ரோந்து போலீசார்,போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தடாக்கோவில் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார்கள், இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்தி சென்று மடக்கிப் மூன்று நபர்களையும் தடா கோயில் பகுதியில் பிடித்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கத்தி, செல்போன்கள், இருசக்கர வாகனம்
உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து, போலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செயின் பறிப்பு,இரு சக்கர வாகன திருட்டு என பல குற்ற சம்பவங்களை
ஈடுபட்ட மூன்று நபர்களை சினிமா பாணியில் அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போலீசார் துரத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் இருந்ததால் அதனை வைத்து போலீசார் மூவரையும் பிடித்துள்ளனர்.