நாகபட்டினம் அருகே வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்க சித்தர் ஆசிரமத்தில் ஆண்டுதோறும் பவுர்ணமி ஐப்பசி பரணி விழா 2 நாள்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா ஐப்பசி மாத பவுர்ணமி விழா இன்று கோரக்க சித்தர் ஆசிரமத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி விழாவின் முதல்
நாளான இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோரக்கசித்தர் ஜீவசமாதி பீடத்தில் மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம்
உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.