திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வடிவேல் (40) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வெயிட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பணி முடிந்து இரவு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் பெரியார் சிலை அருகே வந்த பொழுது பின்னால் செங்கல் லோடு ஏற்றி வந்த லாரிமோதியது.
இதில் வடிவேல் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். லாரியின் சக்கரம் வடிவேல் மீது ஏறி இறங்கியது இதில் வடிவேல் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த மணி மகன் மகேந்திரன் என்பவனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.