மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி துவங்கியது. வருகின்ற நாளை வரை மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் மயிலாடுதுறை திருவாரூர் கோயமுத்தூர் திருச்சி சேலம் விழுப்புரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றனர். முதல் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூர் ஸ்ரீனிவாசா மேல்நிலைப்பள்ளி அணியும் விழுப்புரம் மாவட்டம் தட்சசீலா யூனிவர்சிட்டி அணியும் மோதின. போட்டியை மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் பி கல்யாணம் அன்பழகன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். பகல் இரவாக நடைபெறும் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் கபடி போட்டிகளை கண்டு ரசித்தனர்.