மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஞானப்பிரகாச விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருச்சி சமயபுரத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சுமித்ரா என்ற பெண் யானை தருமபுரம் ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. கும்பாபிஷேக யாக பூஜையின்போது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளத்திற்கு ஏற்றவாறு யானை சுமித்ரா தன் தலையை ஆட்டி நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வாட்ஸ்-அப் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.