திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவமனையில் செயற்கை கை கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
R & R செயற்கை கை, கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொறுத்துதல் மையம் சார்பில் செயற்கை கை கால் உறுப்புகள் விநியோக நிகழ்ச்சி திருச்சி இருங்களூர் அருகே உள்ள SRM மருத்துவ கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 20 க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு செயற்கை கை, கால் உறுப்புகள், மற்றும் சிறப்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.
அந்த செயற்கை கை, கால்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் மருத்துவமனையின் தலைவர்
சிவக்குமார் மற்றும் R & R செயற்கை கை கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும்
பொருத்துதல் மைய தலைவர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு செயற்கை உறுப்புகளை வழங்கினர்.
R & R செயற்கை கை கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொருத்துதல் மைய தலைவர் ராஜலட்சுமி கூறுகையில்..,
எனது மகன் சிவக்குமார் என்ஜினீயரிங் படிப்பு படிக்க வேண்டும் என கூறினார். ஆனால் ஏதாவது சமூக சேவையுடன் உள்ள படிப்பை படிக்க வேண்டும் என அறிவுறுத்தினேன். பிறகு எனது மகன் மறுத்துவபடிப்பை மேற்கொண்டார். அதன் பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் செயற்கை கை கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொறுத்துதல் மையத்தினை துவங்கினார். அதுவும் என்னுடைய பெயரில். தற்பொழு இலவசமாக இந்த செயற்கை உறுப்புகளை வழங்கி வருகிறோம். இதில் கிடைக்கும் சந்தோசம் வேறு ஏதும் இல்லை என கூறினார்.