பெட்ரோல் குண்டு வீசப்பட்டவிவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி விளக்கமளித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கமளித்துள்ளார். அதில்…. ஆளுநர் மாளிகைக்குள் நுழைய ரவுடி கருக்கா வினோத் முயற்சிக்கவில்லை. ஆளுநர் மாளிகை கூறுவது போல் ராஜ்பவன் ஊழியர்களால் ரவுடி கருக்கா வினோத் பிடிக்கப்படவில்லை. கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறியது பொய். ஆளுநர் மாளிகை நுழைவாயில்
எரித்து சேதப்படுத்தப்பட்டது என கூறியது பொய். ராஜ்பவன் ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடித்ததாக கூறியது பொய். தருமபுரம் சென்றபோது, கற்களாலும், தடியாலும் தாக்கப்பட்டதாக ஆளுநர் கூறியது பொய்.
பாதுகாப்பில் உள்ள போலீசாரே ரவுடி கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்தனர். ஆளுநர் மாளிகை வெளியிட்ட புகார், முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்த ‘பொய்’ குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரத்துடன் தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளார்.