Skip to content
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…

  • by Senthil

இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (27.10.2023) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னிலையில் வெளியிடப்பட்டார்கள்.

பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது… பெரம்பலூர் மாவட்டத்தில் 05.01.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,00,971 வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,74,890 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,75,861 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1160 ஆண் வாக்காளர்களும், 1406 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 856 ஆண் வாக்களர்களும், 958 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 3,968 ஆண் வாக்காளர்களும், 5,255 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,578 ஆண் வாக்காளர்களும், 4,941 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,

தற்போது வெளியிடப்படுகின்ற வரைவு வாக்காளர் பட்டியலின் படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடிகள் உள்ளன.

147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,94,314 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,43,585 ஆண் வாக்காளர்களும், 1,50,721 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம்; 2,68,185 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,32,906 ஆண் வாக்காளர்களும், 1,35,279 பெண் வாக்காளர்களும், 0 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 5,62,499 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,76,491 ஆண் வாக்காளர்களும், 2,86,000 பெண் வாக்காளர்களும், 8 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2024-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 27.10.2023 முதல் 09.12.2023 வரை விண்ணப்பங்கள் பெற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. இப்பணிக்காக கீழ்கண்ட நாட்களில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்
(சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி மையங்களில்) 04.11.2023 (சனி)
05.11.2023 (ஞாயிறு)
18.11.2023 (சனி)
19.11.2023 (ஞாயிறு)

இவ்வாறு பெறப்படும் மனுக்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 05.01.2024 அன்று வெளியிடப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி. 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சத்தியபால கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளா, பெரம்பலூர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வருவாய் வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!