திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஜெய் நகரைச் சேர்ந்தவர் சிவா (43) தனது தாய் சந்திராவுடன் சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு வீட்டை பூட்டு விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது மாலை மீண்டும் மின் இணைப்பு வந்துள்ளது அப்பொழுது அந்த வீட்டில் இருந்து புகை வந்துள்ளது இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் இச்சம்பவம் குறித்து உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல்
கொடுத்தனர் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து. உள்ளே சென்று பார்த்த பொழுது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும் வீட்டிலிருந்த பிரிட்ஜ் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்துள்ளது அதன் சேதம் என்னவென்று வீட்டில் உரிமையாளர் வந்த பிறகு தெரிய வரும் என தெரிவித்தனர்.