திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நல்லவாண்டு தெருவில் வசிப்பவர் செல்லம்மாள்.இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்
இவர் யாரும் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தவர் இன்று மதியம் வீட்டின் வெளியே விறகு அடுப்பாள் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது தீ பொறி காற்றில் பரவி செல்லமால் வீட்டின் கூரை மேல் விழுந்தது .
வீட்டின் கூரை காய்ந்திருந்ததால் தீ மல மலவென கூரை பற்றி எரிய தொடங்கியது
இதனை கண்ட. அக்கம் பக்கதினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க நீரை அடித்தனர் சுமார் 20 நிமிடம் போராட்டத்திற்கு
பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
துறையூர் கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்
துறையூர் நகரப் பகுதியில் தீ பிடித்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.