Skip to content
Home » சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… ஐயப்பனை தரிசிக்க 10 மணி நேரம் ஆகுது..

  • by Senthil

2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பிறகு அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ்பக்தர்களின் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருப்பதால் இந்த சீசனின் பாதியில் தரிசனம் செய்ய கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் 8 முதல் 10 மணி நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். இதற்கிடையே மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14- ந் தேதி நடைபெறுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!