சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் பகுதியை சேர்ந்த விவேகானந்தன். இவர் திமுக பகுதி பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன் காமராஜ் தந்தை மகன் இருவரும் திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காமராஜ் இன்று காலை வழக்கம் போல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் உள்ளே புகுந்து காமராஜை வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்த போது காமராஜர் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது . இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.