Skip to content

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்.. திட்டமிட்டப்படி நடக்கும்… ஜவாஹிருல்லா..

ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவெடிப்பு தாக்குதலை தமுமுக வன்மையாக கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு தமிழ்நாடு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமுமுக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வரும் அக். 28 அன்று நடைபெறவுள்ளது;

jawahirullah

இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவெடிப்பு தாக்குதலை தமுமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமுமுக நடத்தவுள்ள ஜனநாயகப் போராட்டத்தை திசைச் திருப்பும் விதமாக இதுபோன்ற சம்பவத்தைச் சமூகவிரோதிகள் செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

tn

பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மட்டும் கைது செய்யாமல் அவரது பின்னணியில் உள்ளவர்களையும் தமிழகக் காவல்துறை விசாரித்து விரைவில் கைது செய்ய வேண்டும் என தமுமுக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்;கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இயங்கும் தமுமுக, தனது ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தைக் கட்டுக்கோப்புடன் திட்டமிட்டபடி அக். 28 மாலை நடத்தும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!