கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). இவர் Zomoto நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணி செய்து வருகிறார். அவசர தேவைக்காக இவரின் செல்போன் மூலம் அவரது மனைவி ஃபேஸ்புக்கில் வரும் விளம்பரம் மூலம் V-Cash என்ற அப்ளிகேஷன் மூலம் 2,500 ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி சர்வீஸ் பீஸ் மேனேஜ்மென்ட் பீஸ் என்று சுமார் 1000 ரூபாயை கழித்துக் கொண்டு ஒரு வார தவணை காலத்துக்குள்ளாக திருப்பி செலுத்தும் வகையில் 1,487 ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஒரு வாரம் கழிந்து நேற்று கடன் தவணை கட்டச் சொல்லி அப்ளிகேஷனை சேர்ந்த நபர் திரும்ப கடன் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். வாங்கியது 1487 ரூபாய், ஒரு வார தவணை மட்டும் பெற்றதற்கு 2612 ரூபாய் கட்ட வேண்டும் என மிரட்டி உள்ளனர்.
பணி முடித்துவிட்டு மாலையில் பணத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்த
15 நிமிடத்தில் பணத்தை செலுத்த வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய முழு விவரம் எங்களிடம் உள்ளது. உன்னுடைய மனைவி புகைப்படத்தை மார்ஃபிங் செய்து நண்பர்களின் எண்களுக்கு அனுப்பப்படும் என்று வாட்ஸ்அப் வழியாக மிரட்டி உள்ளார். சைபர் கிரைம் போலீசிடம் புகார் தருவேன் என பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்குள் அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு, அவரது ஃபோனில் உள்ள தொலைபேசி எண்களை நம்பர்களை பதிவிறக்கம் செய்து ரவி வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியதோடு, நாங்களும் சைபர் கிரைம் ஏஜென்சிதான் என்று அந்த நபர் மிரட்டி உள்ளார். இது தொடர்பாக Zomoto ஊழியர் பிரபு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.