கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ஆளுநர் ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆளுநர் எழுப்பி இருக்கும் கேள்விகள் மிக முக்கியமான கேள்விகள். பல காலமாக தமிழகத்தை சேர்ந்த பலர் எழுப்பி வரும் கேள்விகள் தான். தமிழகத்தின் ஆளுநராக வந்த பிறகு தமிழகத்தில் இருந்து சுதந்திரத்திற்கு போராடிய வீரர்களின் பட்டியலை கேட்டதாகவும், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் வெறும் 40 பேர்தான் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
தான் தேடி கண்டுபிடித்த பட்டியலில் 6000 பேர் இருப்பதாக கூறியிருந்தார். அவர்களுக்கு தொடர்ந்து மரியாதை அடுத்து வருவதாகவும் பொது வெளியில் அவர்கள் குறித்து பேசுவதாக கூறுகின்றார். ஆனால் டி.ஆர். பாலு ஆளுநர் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஏக வசனத்தில் ஒருமையில் திட்டுவதை மட்டுமே வேலையாக கொண்டு அறிக்கையை தயாரித்திருந்தார். தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் சாதிமுத்திரையில் அடைக்கப்பட்டு ஒரு குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைவராக உருவெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்திருந்தார். தமிழகத்தில் குருபூஜைக்கு சென்றால் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் .திமுக எவ்வாறு மாற்றி வைத்திருக்கிறது. என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என்னுடைய பெரும் சிரிப்பு தான் அதற்கு பதில் என்று கிண்டலாக கூறி சென்றார்.