பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் பெரிய அளவில் தினசரி காய்கறி சந்தையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார். இங்கிருந்து கோயம்பேடுக்கும், மலேசியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.இதனால் சுமார் 15ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன் பெற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் டத்தோ பிரகதீஸ் குமார், மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னாள் டிஐஜி ரவி பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சியாமளாதேவி பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி ரோவர் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் ஜான் அசோக் பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் உள்ளிட்ட பொதுமக்கள் விவசாயிகள் 1000க்கும் மேற்பட்டோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் .