தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4 % உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது 42% அகவிலைப்படி உள்ள நிலையில் இனி 46% ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், பென்சனர்கள் . மற்றும் குடும்ப பென்சனர்கள் 16 லட்சம் பேர் பயனடைவார்கள். அரசுக்கு ஆண்டுக்கு 2546.16 கோடி கூடுதலாக செலவாகும். தமிழக அரசு இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.