திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம் பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனுவில்,
நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட் டளை தலைவராக உளேன். கடந்த 1990ம் ஆண்டு முதல் திமுக கட்சியின் உறுப்பினராகவும் உள்ளேன்.
திருச்சி திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அரு கில் 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பம் வைக் கப்பட்டுள்ளது. இந்த இடத் தின் அருகில் பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடமாகும்.
மேலும் இங்கு பேருந்து நிறுத்தம் இருப்பதால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் ராட்சத கொடி கம்பம் அமைத்து இருப்பதால் பின்னாளில் மழை மற்றும் புயல் காலங்க ளில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் வாய்புள்ளது.
அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்து உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு கட்சி கொடி அமைப்பது என் பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். நானும் இதே கட்சியை சேர்ந்தவனாக இருந்தாலும், அபாயகரமாக உள்ள கொடி கம்பம் அமைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை.
கடந்த ஏப்ரல் மாதம் சம் மந்தப்பட்ட இடத்தில் திமுக கொடிக்கம்பத்தை நிறுவி விட்டனர் . எனவே திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடு ஞ்சாலை, OFT ஆர்ச் அருகில் அரசு புறம் போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர ராட்சத திமுக கொடி கம்பத்தை அகற்றி பொதுமக்கள் பயமின்றி நட மாட உரிய உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என மனு வில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 100 அடி உயர கொடி கம்பத்தை 15 நாட்களில் அகற்ற திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு அறிக்கை தாக் கல் செய்ய உத்தரவிடப்பட் டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மாவட்டஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், விக்டோரியாகவுரி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் நீதி மன் றம் உத்தரவிட்டும் திமுக கொடிக்கம்பம் அகற்றப்பட வில்லை எனவும், ஆளுங்கட் சியாக திமுக உள்ளதால் ஆட்சியர் கொடிக்கம்பத்தை அகற்றவில்லை என வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதி பதிகள்,ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதை அனுமதிக்க முடி யாது. சட்டம் என்பது ஆளுங் கட்சிக்கும் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஒன்று தான். ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் நீதிமன்றம் உத்தர விட்டும் ஆட்சியர் அகற்ற நடவடிக்கை
எடுக்கவில்லை என்பது உத்தரவை மதிக்காத செயலாகும். இந்த கொடிக் கம்பத்தை வரும் 31ம் தேதிக் குள் திருச்சி மாவட்ட கலெக்டர் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அந்தக் கொடி கம்பத்தை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று கொடிக்கம்பத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் ஓரிரு நாளில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு இடமாற்றப்பட்டு வைக்கப்படும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சட்டத்துக்கு உட்பட்டு எந்த கட்சியினராக இருந்தாலும் நட வேண்டும். ஏற்கனவே சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கொடி கம்பம் சொந்த இடத்தில் நடவு செய்ய இருந்ததை போலீசார் அப்புறப்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுகவினர் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.