புதுக்கோட்டையில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 222வது வீரவணக்க நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
அகமுடையர் சங்கத்தின் சார்பில் புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்களின்
அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, பாரதீய ஐனதாகட்சி மாவட்ட துணைத்தலைவரும்,சமூக ஆர்வலருமான
ஏவிசிசி.கணேசன், சாத்தையா,ச.துரை,எஸ்என்.பாலு, கே.சரவணன்,கே.வாசுதேவன், ஜி.வேணுகோபால்,த.விஜயேந்திரன்,எஸ்.வெங்கடேசன்,ஏ.மிதுன், புதுகை நகர இளைஞர் அணி தலைவர் சபரி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.