Skip to content
Home » சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருக்கு வளை அடுத்த கொடியலத்தூர், ஆதமங்கலம் வலிவலம், கண்ணாப்பூர், மருதூர், கச்சநகரம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 ஏக்கரில் உழவு பணிகள் மேற்கொண்டு சன்னரகம் மற்றும் மத்திய ரகம் சம்பா நெல் தெளித்து 1 மாதம் ஆகியும் தண்ணீர் இல்லாமல் மழையும் இல்லாமல் நெல்மணிகள் முளைக்காமல் வயல்கள் வறண்டு காணப்படுவதால் மயில் புறா உள்ளிட்ட

பறவைகள் சாப்பிடுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .  நகைகளை அடகு வைத்தும்,  மற்றும் கடன் வாங்கி சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் எவ்வாறு கடனை அடைப்பது என  வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.  மேலும் இதுவரை குறுவைக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. சம்பா சாகுபடியை விவசாயிகள் மேலும் மேற்கொள்ளலாமா என வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குறுவைக்கு கூடுதலாக நிவாரணம் வழங்கி தற்போது சம்பா பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *