புதுவை வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (50). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கருணாகரன் கடையில் இருந்தபோது 19 வயது பெண் தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டார். கல்லூரி மாணவி என்றும் உறவினர் வீட்டில் இருந்து படிப்பதாகவும் எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதை என்றும் கூறி தற்போது அந்த சூழ்நிலை சரியில்லாததால் தங்கயிடம் கிடைக்குமா என்று கேட்டு அறிமுகம் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கருணாகரன் தங்கள் வீட்டு மெத்தையில் அறை ஒன்று உள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் அவரது செல்போன் நம்பரை கேட்டு தெரிந்து கொண்டு நான் நாளை வருவதாக கூறி சென்றார். அதனைத் தொடர்ந்து மறுநாள் கருணாகரனுக்கு தொலைபேசியில் மெசேஜ் அனுப்பி பழகி உள்ளார். இரண்டு நாட்கள் கழித்து வில்லியனூரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் தான் இருப்பதாகவும் கருணாகரனுக்கு கால் செய்து வந்தால் ஜூஸ் குடிக்கலாம்என்று வனிதா கூறியுள்ளார்.
இதனையடுத்து கருணாகரன் வில்லியனூருக்கு ஜூஸ் கடைக்கு சென்று உள்ளார் இருவரும் ஜூஸ் குடித்து சகஜமாக பேசி உள்ளனர் மேலும் கருணாகரனை நீங்கள் அழகாக பேசுகிறீர்கள் ஆசை வார்த்தைகளை கூறி நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த பெண் கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பி, இரவு வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை சுடுகாட்டு சாலையில் பம்பு செட்டிற்கு சென்று இருவரும் ஆடைகளை கலைத்தனர் அப்போது மறைந்திருந்த அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் கையில் செல்போனை படம் எடுத்தபடி டார்ச் லைட் அடித்துக் கொண்டு கருணாகரன் நோக்கி வந்துள்ளனர். அருகில் வந்த மூன்று பேரும் பெண்ணை பெயர் சொல்லி அழைத்துள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த கருணாகரன் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பதற்றமானார். அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராமு அருண்குமார் மற்றும் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை மிரட்டி கருணாகரன் வைத்திருந்த 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஜிபி முறையில் 50,000 ரூபாய் மேலும் வில்லியனூர் கடையில் கடன் வாங்கி கொடுத்த வகையில் 30 ஆயிரம். ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர் பின்னர் வீட்டுக்கு வந்த கருணாகரன் இதை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். இது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வில்லியனூர் போலீசார் கருணாகரனின் புகாரை பெற்றுக்கொண்டு அந்த பெண் மற்றும் ராமு அருண்குமார் பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வருவது போன்ற சம்பவத்தை தற்போது வில்லியனூரில் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இது போன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலை எண் வேலையன் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கனுவா பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த ராமு மற்றும் அருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.