Skip to content

ஆயுதபூஜை… தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு உதவிய ரயில்வே தொழிலாளர்கள்…நெகிழ்ச்சி

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் Pumps & Blowers என்ற பகுதியில் சாமி பூஜை செய்ய பணம் போக மீதி பணத்தை தனது வீட்டிற்கு பொருட்கள் வாங்காமல் தன்னுடன் பணிபுரியும் நண்பருக்கு பணமாக கொடுத்து விட்டார்கள். ஆர்.சீனிவாசன் (45) விபத்தில் கிட்டதட்ட 8 மாதமாக பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இவருக்கு லீவு இல்லை, ஆகையால் சம்பளம் இல்லை. வந்த போனஸ் தொகை பேங்க் எடுத்துக் கொண்டது.

தன் குடும்பம் , தன் சுகம் என்ற சுயநலம் இல்லாமல் தன்னுடன் பணிபுரியும் குடும்பம் கஷ்டத்தை உணர்ந்து ஆயுதபூஜை சாமி கும்பிட தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு ஆயுதபூஜை போட்டுவிட்டு மீது இருந்த (10400 ரூபாய் ) பணத்தை சீனிவாசன் மனைவியிடம் கொடுத்தார்கள். நட்பு என்பது துன்பங்களை துடைப்பதாக இருக்க வேண்டும். நண்பர்கள் உதவி கேட்க தயங்கி நிற்பார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து

கொண்டு அவர்களிடம் கேட்காமலே அவர்களுடைய துன்பங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். என எடுத்துகாட்ட விளங்கி பொன்மலை ரயில்வே டீசல் பிரிவு கள் மார்டின், பத்மநாபன், திருமுருகன், செல்வராஜ், கே.சி. நீலமேகம், பெரியசாமி, சேதுராமன், செந்தில், உதயகுமார், ஐஸ்டின் ராஜா, நளினி, காளியப்பன் , உலகநாதன், ஸ்ரீவசன், மற்றும் டீசல் பிரிவு நண்பர்கள் ஆவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *