மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பூம்புகார் கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை மேற்கொண்டனர். ஆணையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருள்மூர்த்தி தலைமையிலும் பூம்புகார் கல்லூரி முனைவர் சங்கர், இந்திரா, தமிழ் துறை பேராசிரியர் அருள் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 2.5 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அகற்றினர்.